Thursday, May 3, 2012

தமிழில் போட்டோஷாப் (Photoshop) கற்றுக் கொள்ளுங்கள்
Learn Photoshop Course in Tamil. Free education to all.
Easy to understand Practical Lessons. Step by Step illustration with pictures.

போட்டோஷாப் என்பது டிசைனிங் சாப்ட்வேர் (Designing Software) ஆகும். இது போட்டோக்களை எடிட்டிங் (Photo Editing) செய்ய பயன்படுகிறது. இதன் மூலம் போட்டோக்களில் சிறப்புப் தோற்றத்தை (Special Effects) நீங்கள் உருவாக்கலாம்.

"அடோப்" என்ற நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. போட்டோஷாப் கற்றுக் கொள்வது மிகவும் எளிது. இங்கு கீழே "போட்டோஷாப் பாடங்கள்" கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடங்கள் உங்களுக்கு எளிதில் புரியுமாறு தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பாடங்களைப் படித்து, அதனை அப்படியே போட்டோஷாப்பில் செய்து பாருங்கள். இதன் மூலம் போட்டோஷாப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்துவது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இதில் வேலைவாய்ப்புகள் மிக அதிகம். போட்டோஷாப் கற்றுக் கொண்ட பிறகு நீங்கள் திருமணப் பத்திரிக்கை டிசைன் செய்தல், திருமண ஆல்பம் டிசைன் செய்தல், வெப்சைட் டிசைன் செய்தல், அட்டைப் பெட்டிகளுக்கான படங்களை டிசைன் செய்தல், புத்தகங்களின் அட்டைப் படங்களை டிசைன் செய்தல் போன்ற, என்றும் வருமானம் தரும் தொழில்களில் ஈடுபடலாம். மேலே குறிப்பிட்டுள்ள வேலைகளை சுருக்கமாக DTP (Desk Top Publishing) என்று கூறுவார்கள்.

போட்டோஷாப் கற்றுக்கொள்ள ஆங்கில அறிவு அல்லது கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அறிவு ஆகியவை தேவை இல்லை. நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். இதனை எளிதில் கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு புரியுமாறு, எளிய முறையில் கற்றுக்கொடுப்பதற்காக இங்கு போட்டோஷாப் பாடங்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.


1. போட்டோஷாப்பின் திரை (main screen) மற்றும் அதன் கருவிகள் (ToolBox) பற்றிய அறிமுகம்
(Introduction to Photoshop main screen and its Toolbox)


2. போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகள்.
(Learn about Technical Terms of Photoshop)


3. போட்டோஷாப்பை திறப்பது எப்படி?
(Learn about how to open Photoshop Software in Windows 98,2000,Windows XP or Windows 7)


4. போட்டோஷாப்பின் உள்ளே ஒரு போட்டோவை திறப்பது (open) எப்படி?
(Learn about how to open a picture file in Photoshop)

Group-1

கீழே கொடுக்கப்பட்டுள்ள, Group-1ல் உள்ள 5 பாடங்கள் அடிப்படைப் பாடங்கள் ஆகும். These lessons are free to all.
பாடம் எண் பாடத்தின் தலைப்பு
1. சதுரம் வரைந்து அதன் உள்ளே கலர் நிரப்புதல்
2. போட்டோவில் உள்ள வெளிச்சம் (brightness) மற்றும் கலர் அளவினை(contrast) சரிசெய்தல்
3. போட்டோவின் உள்ளே எழுத்துக்களைச் (text) சேர்த்தல்
4. கலர் போட்டோவை கருப்புவெள்ளை படமாக மாற்றி, அதில் திருத்தம் செய்தல்.
5. "பேட்டர்ன்"யை பயன்படுத்தி பேக்ரவுண்ட் (background) டிசைனை உருவாக்குதல்.

Group-2

பாடம் எண் பாடத்தின் தலைப்பு கட்டணம்
6. ஒரு போட்டோவைச் சுற்றி அழகான பார்டர் (border) வரைதல் Rs. 20
(Rupees Twenty Only - for lessons 6 to 10)
7. ஊதா நிறத்தில் உள்ள காரை (blue colour car) பச்சை நிற காராக (green colour car) மாற்றுதல்.
8. அட்டைபெட்டிக்கான டிசைன் உருவாக்குதல்
9. ஒரு போட்டோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கி, அதனை வட்டவடிவமாக அழகுபடுத்துதல்.
10. வலதுபக்கம் பார்த்தபடி இருக்கும் ஒரு போட்டோவை இடதுபக்கம் பார்த்தபடி திருப்பிவைத்தல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள, Group-2வில் உள்ள 5 பாடங்களின் மொத்தக்கட்டணம் ரூ.20 மட்டுமே. (Rupees Twenty Only). இப்பாடங்களை உங்களது "இ-மெயில்"க்கு (e-mail) அனுப்பி வைக்கிறோம். அவற்றை உங்கள் e-mailல் படித்துக் கொள்ளுங்கள். இதற்கான கட்டணத்தை (Rs.20) கீழ்கண்ட முகவரிக்கு Money Order (M.O) மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். Demand Draft (D.D), Cheque ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

  Mrs.S.MALLIKA
3/1178, LINGAPURAM COLONY
OPP. LATCHAM THEATER
SIVAKASI (EAST) - 626189.
TAMILNADU.

நீங்கள் Money Order அனுப்பிய பிறகு sriharieduca@gmail.com என்ற எங்கள் e-mail முகவரிக்கு கீழ்கண்டவற்றை e-mail அனுப்பவும்.

1. Course Code : Photoshop - Group 2 - Tamil
2. Your Name, Address and Phone Number
3. Your Money order number and Date

உங்களது Money Order எங்களுக்கு கிடைத்த 24மணி நேரத்தில், Photoshop Group-2வில் உள்ள 5 பாடங்களும் உங்களது e-mailக்கு அனுப்பி வைக்கப்படும்.

Please Send your suggestion / comments / feedback / enquiries to sriharieduca@gmail.com
Free Domain Name Registration

No comments:

Post a Comment