Photoshop Introduction Lesson 1 - Tamil

போட்டோஷாப்பின் திரை (main screen) மற்றும் அதன் கருவிகள் (ToolBox) பற்றிய அறிமுகம்
(Introduction to Photoshop main screen and its Toolbox)


போட்டோஷாப்பை நீங்கள் திறந்தவுடன், அதன் main screen கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருக்கும்.

1) Menu Bar (மெனு பார்)

இதில் File, Edit, Image, Layer, Select என்ற Menuகள் இருக்கும். இந்த மெனுக்களின் உள்ளே நமது போட்டோவினை எடிட்டிங் (Photo editing) செய்யத் தேவையான கட்டளைகள் (commands) இருக்கும்.

2) ToolBox (டூல் பாக்ஸ்)

இந்த Toolbox, நாம் எடிட்டிங் (editing) செய்யும் போட்டோவின் இடது பக்கம் இருக்கும். போட்டோஷாப்பின் உள்ளே படம் வரைதல், ஒரு படத்தில் தேவையான பகுதிகளை செலக்ட் செய்தல், தேவையற்ற பகுதிகளை அழித்தல் போன்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை "Tool" (டூல்) என்று கூறுவர். உதாரணமாக படம் வரைய "Brush" என்ற Tool பயன்படுகிறது. படத்தை அழிக்க Eraser என்ற Tool பயன்படுகிறது. போட்டோஷாப்பில் கிட்டத்தட்ட 55 Toolகள் உள்ளன. இந்த Toolகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள இடமே ToolBox ஆகும்.

3) "Options" Palette (ஆப்ஷன்ஸ் பேலட்)

இது menu barன் கீழே இருக்கும். நீங்கள் ToolBoxல் ஒரு Toolயை செலக்ட் செய்யும் பொழுது, அந்த Tool சம்பந்தப்பட்ட விசயங்கள் இந்த "Options Palette"ல் இருக்கும்.

3) Ruler (ரூலர்)

இது ஸ்கேல் (scale) போல இருக்கும்.. நாம் எடிட்டிங் (editing) செய்யும் போட்டோவின் நீளம், அகலம் போன்றவற்றின் அளவினை (size) அறிந்து கொள்ள இந்த "Ruler" பயன்படுகிறது.

4) Swatches Window (சுவாட்சஸ் விண்டோ)

"Swatches" என்பது ஒரு சிறிய window ஆகும். இதில் பலவிதமான கலர்கள் இருக்கும். ஒவ்வொரு கலரும் ஒரு சிறிய சதுரத்தின் உள்ளே இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான கலரை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம். அதற்கு, உங்களுக்குப் பிடித்த கலர் மீது click செய்யுங்கள். உடனே அந்த கலர் செலக்ட் ஆகி விடும்.

5) Layers Window (லேயர் விண்டோ)

நமது பைலில் (file) தனித்தனி அடுக்கில் உள்ள படங்களை குறிப்பிட இந்த Layers Window பயன்படுகிறது. லேயர் (layer) என்றால் "அடுக்கு" என்று அர்த்தம். ஒரு போட்டோஷாப் பைலில் (file) பல படங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, அடுக்கு அடுக்காக வைக்கப்பட்டிருக்கும். இந்த அடுக்கில் உள்ள ஒவ்வொரு படமும் ஒரு "லேயர்" என்று அழைக்கப்படுகிறது.

6) Photo (or) Picture for Editing

நாம் போட்டோஷாப்பில் எடிட்டிங் செய்யும் போட்டோ அல்லது படம், போட்டோஷாப்பின் நடுப்பகுதியில் இருக்கும்.