Photoshop Introduction Lesson 2 - Tamil

போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகள்.
(Learn about Technical Terms of Photoshop)

1. Tool (டூல்)

போட்டோஷாப்பின் உள்ளே படம் வரைதல், ஒரு படத்தில் தேவையான பகுதிகளை செலக்ட் செய்தல், தேவையற்ற பகுதிகளை நீக்குதல் அழித்தல் போன்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை "Tool" (டூல்) என்று கூறுவர். உதாரணமாக படம் வரைய "brush" என்ற Tool பயன்படுகிறது. படத்தை அழிக்க Eraser என்ற Tool பயன்படுகிறது. போட்டோஷாப்பில் அனைத்து Toolகளும் Toolboxல் இருக்கும்.

2. Toolbox (டூல் பாக்ஸ்)

போட்டோஷாப்பில் கிட்டத்தட்ட 55 Toolகள் உள்ளன. இந்த Toolகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள இடமே ToolBox ஆகும். கீழே உள்ள படத்தில் ToolBox காட்டப்பட்டுள்ளது.

3. Foreground and Background Colour (போர்கிரவுண்ட் கலர், பேக்கிரவுண்ட் கலர்)

நீங்கள் brush (ப்ரஷ்) மூலம் படம் வரைய ஒரு கலரைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த கலருக்கு foreground கலர் என்று பெயர். இந்த foreground கலர் Toolboxல் கீழ் பகுதியில் காட்டப்பட்டிருக்கும்.

நீங்கள் Eraser மூலம் ஒரு படத்தை அழிக்கும் பொழுது, அழிக்கப்படும் அந்த இடம் ஒரு கலரால் நிரப்பப்படும். இந்த கலருக்கு background கலர் என்று பெயர். இந்த background கலர் Toolboxல், foreground கலரின் பின்னால் இருக்கும்.

பொதுவாக கருப்பு நிறம் "foreground" கலராகவும், வெள்ளை நிறம் "background" கலராகவும் இருக்கும். இதனை உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.



4. Swatches (சுவாட்சஸ்)

"Swatches" என்பது ஒரு சிறிய window ஆகும். போட்டோஷாப்பில் "Window" என்ற menuவில் "Swatches" என்பதை click செய்யுங்கள். உடனே "Swatches" என்ற window திரையில் தோன்றும்.

இந்த "Swatches" window கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் பலவிதமான கலர்கள் இருக்கும். ஒவ்வொரு கலரும் ஒரு சிறிய சதுரத்தின் உள்ளே இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான கலரை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம். அதற்கு, உங்களுக்குப் பிடித்த கலர் மீது click செய்யுங்கள். உடனே அந்த கலர் foreground கலராக செலக்ட் ஆகி விடும்.


5. Selection (செலக்சன்)

ஒரு போட்டோவில் நமக்கு தேவையான பகுதியை செலக்ட் செய்வதற்கு Selection என்று பெயர். இந்த selection உங்கள் திரையில் எறும்புகள் வரிசையாக ஓடுவது போல ஓடிக்கொண்டிருக்கும். உதாரணமாக கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.


6. Brush (ப்ரஷ்)

நீங்கள் படம் வரைவதற்கு brush பயன் படுகிறது. ஒரு brushயை நீங்கள் செலக்ட் செய்யும் பொழுது அதன் அளவினை (size) குறிப்பிட வேண்டும்.


7. Path (பாத்)

போட்டோஷாப்பில் Pen (பென்) என்ற Tool உள்ளது. இதனை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் உருவத்தினை, உங்கள் கையால் mouse மூலம் வரையலாம். இவவாறு நீங்கள் வரைந்த உருவத்திற்கு Path என்று பெயர்.

8. Layer (லேயர்)

லேயர் (layer) என்றால் "அடுக்கு" என்று அர்த்தம். ஒரு போட்டோஷாப் பைலில் (file) பல படங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, அடுக்கு அடுக்காக வைக்கப்பட்டிருக்கும். இந்த அடுக்கில் உள்ள ஒவ்வொரு படமும் ஒரு "லேயர்" என்று அழைக்கப்படுகிறது.

9. Pattern (பேட்டர்ன்)

ஒரு சிறிய டிசைனை (design) பல வரிசைகளில் திரும்பத் திரும்ப வரைந்து மிகப் பெரிய அளவில், புதியதாக ஒரு டிசைனை உருவாக்கலாம். அந்த சிறிய டிசைனை, "பேட்டர்ன்" (Pattern) என்று அழைக்கின்றனர்.

10. History (கிஷ்டரி)

போட்டோஷாப்பின் உள்ளே நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு History என்று பெயர். இந்த History மூலம் நாம் பின்நோக்கிச் செய்யலாம். உதாரணமாக, ஒரு போட்டோவில் நீங்கள் தெரியாமல் ஒரு பகுதியை அழித்துவிட்டால், அழித்த அந்தப் பகுதியை மீண்டும் திரையில் கொண்டு வந்து விடலாம். இதனை Historyயின் உதவியுடன் செய்ய வேண்டும்.

11. Gradient (கிரேடியன்ட்)

பல கலர்கள் அடுத்தடுத்தாற் போல இருக்கும் "வண்ணமாலை"க்கு "கிரேடியன்ட்" என்று பெயர். இதனை background டிசைனாக பயன்படுத்தலாம்.

12. Transparency (டிரான்ஷ்பரன்சி)

"Transparency" என்றால் "ஒளி புகும் தன்மை" என்று அர்த்தம். அதாவது, வெளிச்சம் ஒரு படத்தின் உள்ளே செல்லும் அளவினை, "Transparency" என்று அழைக்கின்றனர். உதாரணமாக, ஒரு "கண்ணாடி பேப்பர்" 100% Transparency கொண்டது. ஒரு "கறுப்பு நிற அட்டை" 0% Transparency கொண்டது. போட்டோஷாப்பில் இந்த Transparencyயைப் பயன்படுத்தி, ஒரு போட்டோவில் சிறப்பு காட்சித் தோற்றத்தை (Special Effects) உருவாக்கலாம்.

13. Opacity (ஒபாசிட்டி)

ஒரு நிறத்தை பயன்படுத்தி படம் வரையும் பொழுது, அந்த நிறத்தை எத்தனை சதவீதம் பயன்படுத்துகிறோம் என்பதே opacity ஆகும். இதன் அளவு 0% முதல் 100% வரை இருக்கும். உதாரணமாக, ஒரு கோடு வரைய சிகப்பு நிறம் பயன்படுகிறது. அதில் opacityயின் அளவிற்கேற்ப கீழ்கண்டபடி சிகப்பு நிறத்தில் கோடுகள் இருக்கும்.

14. Link (லிங்க்)

Link என்றால் "இணைப்பு" என்று அர்த்தம். ஒரு லேயரை (layer) இன்னொரு லேயருடன் சேர்த்து வரிசைப்படுத்த "Link" பயன்படுகிறது. உதாரணமாக, ஒரு லேயரை மற்றொரு லேயரின் இடதுபக்கம் அல்லது வலதுபக்கம் இருக்கும்படி நகர்த்தி வைக்கலாம். இதற்கு Link பயன்படுகிறது. Link செய்யப்பட்ட லேயரின் இடதுபக்கம் "சங்கிலி" (chain) போன்ற படம் இருக்கும்.